Thursday, September 05, 2013

உலகதரத்தில் தேங்கபட்டணம் துறைமுகம்

உலகதரத்தில் தேங்கபட்டணம் துறைமுகம்
http://thenga-pattanam.blogspot.in/தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் உலகதரம் வாய்ந்ததாக அமையும் என தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் கோர்லாக் பணியினை பார்வையிட்ட பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம், முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம் சின்னத்துறை, இனயம், ஹெலன்காலனி, இரயுமன்துறை, தூத்தூர், சின்னத்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்.

              இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்கின்றனர். தூத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் உயர்ரக மீன்களை பிடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் மீன்பிடி துறைமுகம் இல்லாதததால் விழிஞ்ஞம், விசாகப்பட்டினம், மும்பை, எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் சென்று மீன்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

           மேலும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடலில் ராட்சஸ அலை எழும்பும். சுமார் 30 அடி உயரம் வரை எழும்பும் ஆக்ரோஷமான அலைகள் கடற்கரையோரத்தை தொட்டிருக்கும் வீடுகளை இழுத்து செல்வதும், மீனவர்கள் அலறியடித்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இந்த மாதங்கள் மீனவர்களின் வாழ்வில் சோகம் தாண்டவமாடும். இதனால் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீனவர்கள் தேங்காப்பட்டணத்தில் துறைமுகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அரசு தேங்காப்பட்டணத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வை தொர்ந்து இயற்கை வசதியுடன் இருக்கும் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு முடிவு செய்தது.
                 அதன்படி தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் 40 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதற்கான பணிகளும் கடந்த 11 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமையவிருக்கும் இடம் வரை பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அலை தடுப்புச்சுவர் போடப்பட்டது. இதில் 570 மீ., தூரத்திலும், 270 மீ., தூரத்திலும் இரண்டு கட்டமாக அலை தடுப்புச்சுவர் அமைகிறது. அண்மையில் இந்த பணியை ஆய்வு செய்த மீன்வளத்துறை செயலாளர் நிர்மலா கல் அடுக்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டுமென கூறினார். அதன்படி கல் அடுக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. கடலின் உள்ளே 10 டன், 12 டன் எடையுள்ள ராட்சஸ கற்களை கொண்டு அலை தடுப்புச்சுவர் போடப்பட்டுள்ளது. இந்த அலை தடுப்புச்சுவருக்காக போடப்பட்ட கற்களை பாதுகாக்க கோர்லாக் கற்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சில்பதி என்றும் நிறுவனம் மீன்பிடி துறைமுகத்திற்காக போடப்பட்ட தடுப்புச்சுவர்களை கோர்லாக் கற்கள் போட்டு பாதுகாக்கலாம் என கூறியுள்ளது.

         இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு நிபுணர் சில்வா கூறியதாவது: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு எங்களது பிரான்ஸ் நிறுவனம் சில அறிவுரைகள் வழங்கியுள்ளது. அதாவது மீன்பிடி துறைமுகத்திற்காக போடப்பட்ட கற்களை பாதுகாக்க கோர்லாக் போட வேண்டும். இந்த கோர்லாக்குகள் 5 டன், 8 டன், 10 டன், 12 டன் எடைகளில் உள்ளது. இதில் எடை குறைந்த கோர்லாக்குகளை கடற்கரை துவங்கும் இடத்தில் போட வேண்டும். ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க பெரிய கோர்லாக்குகளை போட வேண்டும். தமிழகத்திலே இந்த கோர்லாக் டெக்னிக்கல் அமல்படுத்தும் முதல் துறைமுகம் தேங்காப்பட்டணம். மீன்பிடித்துறைமுக பணிகளை ஆய்வு செய்ததில் இந்த துறைமுகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமையும். இவ்வாறு பிரான்ஸ் நிபுணர் சில்வா கூறினார். இவருடன் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோர்தான், மீன்வளத்துறை இன்ஜினியர் தர்மராஜ், இளநிலை இன்ஜினியர் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, இன்ஜினியர் லிங்கமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, August 24, 2013

வேதாகம கால அட்டவணை

வேதாகம கால அட்டவணை

http://thenga-pattanam.blogspot.in/கி.பி 670 வரை லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் 4 நூற்றாண்டில் ஜெரோமினால் எழுதபட்டு நடைமுறையில் இருந்து வந்தது. கி.பி 670 வரை லத்தீன் மொழிபெயர்ப்பான வல்கேட் 4 நூற்றாண்டில் ஜெரோமினால் எழுதபட்டு நடைமுறையில் இருந்து வந்தது.
  • விக்கிளிப் வேதம் (கி.பி 1320 -1384 ) John Wycliff
முதன் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த விக்கிளிப் என்பவர் வல்கேட்டிலிருந்து வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது வல்கேட்டிளிருந்த சில தவறுகளை ஆங்கிலத்திலும் கொண்டு வந்தது.80 புத்தகங்களும் மொழி பெயர்க்கபட்டது.

  • குடென்பெர்க் (கி.பி 1455) குடென்பெர்க்
குடென்பெர்க் அச்சகத்தை கண்டு பிடித்தார். வேதாகமம் கையினால் எழுதப்படாமல் மாறாக அச்சிடப்படும் காலம் வந்தது. குடென்பெர்க் மூலம் அச்சிடப்பட்ட முதல் வேதாகமம் லத்தீன் மொழியில் அமைந்தது.

  • 1516 கிபி: எராஸ்மஸ் என்பவர் ஒரு லத்தீன் / கிரேக்கம் மொழிகளில் புதிய ஏற்பாடை தயாரித்தார்.

  • 1522 கிபி: மார்ட்டின் லூதர் புதிய ஏற்பாடை மொழி பெயர்த்தார்.

  • 1526 கிபி: வில்லியம் டின்டேல் புதிய ஏற்பாடு ஒன்றினை தயாரித்தார்; ஆங்கில மொழியில் அச்சிடப்பட்ட முதல் புதிய ஏற்பாடு.

  • 1535 கிபி: Myles கவர்டேல் பைபிள்; அச்சிடப்பட்ட முதல் முழுமையான பைபிள். ஆங்கில மொழி (80 புத்தகங்கள்: புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு மற்றும் உறுதிப்படாதவை)

  • 1537 கிபி: டின்டேல் மத்தேயு  பைபிள்; எட்டாம் ஹென்றி ராஜா ஜான் ரோஜருக்கு புதிய வெளியீட்டான மத்தேயு வேதாகமத்தை வெளியிட அனுமதி கொடுத்தார். இவர் டிண்டேளின் நண்பர் ஆவர்.

  • 1539 கிபி: "கிரேட் பைபிள்" அச்சிடப்பட்டது; முதல் ஆங்கில மொழி வேதாகமம் (80 புத்தகங்கள்). மக்களின் பொது பாவனைக்காக அங்கீகரிக்கப்பட்ட வேதாகமம். இந்த வேதம் மத்தேயு பைபிள் டின்டேல் பைபிள் மற்றும் எபிரேயு பைபளையும் ஒப்பிட்டு மொழி பெயர்க்கபட்டது.

  • 1560 கிபி: ஜெனீவா பைபிள் அச்சிடப்பட்டது (80 புத்தகங்கள்). இளவரசி மேரியினால் உண்டான உபத்திரவத்தில் அநேக அறிஞர்கள் ஜெனிவாவுக்கு சென்றனர். அங்கே மொழி பெயர்ப்பு செய்து எலிசபெத் இளவரசி ஆனா பின்பு தங்கள் நாடு திரும்பி அந்த வேதாகமத்தை பரிசாக இளவரசிக்கு அளித்தனர்.

  • 1568 கி.பி: ஆயர்கள் பைபிள் அச்சிடப்பட்டது (The Bishops Bible).ஒன்பது பிஷப்புகள் கேண்டர்பரி மத்தேயு பார்க்கருடன் இணைந்து வெளியிட்ட பதிப்பு.

  • 1609 கிபி: Douay version  ரோமன் கத்தோலிக்கர்களுக்காக ஆங்கில முதல் முழுமையான  கத்தோலிக்க பைபிள். லத்தீன் வல்கேட் (80 புத்தகங்கள்) இருந்து மொழிபெயர்த்தது.

  • 1611 கிபி: கிங் ஜேம்ஸ் பைபிள்
    சிறந்த வேதம் எது என்கின்ற பிரச்சனையை கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்து அகற்ற முதலாம் James  மன்னர் கி.பி 1604 இல் புதிய வெளியீட்டிற்கு அனுமதி வழங்கினார். இதையே king james பதிப்பு என்று அழைக்கின்றோம்.
    ஐம்பத்தி நான்கு அறிஞர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பகுதியை மொழி பெயர்த்தது. பின்னர் முழு குழுவும் தங்கள் பணியை ஆராய்ந்து ஒவ்வொரு பகுதியையும் திருத்தி சிறப்பாக அமைத்தனர். இறுதியாக தீர்மானிக்கின்ற குழு திருத்தம் செய்து முடித்தது.
    மற்ற ஆங்கில வேதத்தை மொழிபெயர்க்கும் பொழுது இருந்த ஆதாரங்களை காட்டிலும் இவர்களுக்கு அதிக ஆதாரங்கள் இருந்தது. பழைய ஏற்பாட்டை மொழி பெயர்க்க நான்கு மசசொறேடிக் (Massoretic text ) பிரதிகளும், புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க பாசவினால் (இவர் கால்வின் குழுவில் இருந்தவர்) திருத்தியமைக்கப்பட கிரேக்க text  ம் பயன்படுத்தபட்டன.

    அயராத ஆறு வருட கடின உழைப்பிற்கு பின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவான பதத்தை கண்டு பிடித்து மொழிபெயர்த்து கடைசியாக 1611 ல் இந்த பதிப்பை வெளியிட்டார்கள். 1629 ,1638 ,1672 ,1769  இந்த வருடங்களில் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டு முன்னேற்றப்பட்டிருந்தும் மூன்று நூற்றாண்டுக்கு பிறகும்கூட வாசிக்ககூடியதாகவும் விநோயிகிக்ககூடியதாகவும் இருக்கின்றது.

  • திருத்திய பதிப்பு (the revised version )
    கிங் ஜேம்ஸ் பதிப்பிற்கு பிறகு மொளிபெயர்ப்பிட்கு பயங்கரமான எதிர்ப்பு வந்தது. இருந்தாலும் திருத்திய பதிப்பு அமெரிக்க ஆங்கில அறிஞர்களின் திறமையால் வெளிவந்தது.

  • அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பு: கி.பி 1901 (The American standard version)
    ரிவைஸ்ட் பதிப்பின்  திருத்தும் ஆலோசனை குழு தங்களுடைய வேலையையும் ஆராய்ச்சியையும் 1885 ல் தொடர்ந்தனர். மீண்டுமாக மொழிபெயர்த்தனர். அதனிமித்தம் மூலபாஷயோடு அதிக ஒத்திருக்கிறது. டாக்டர் வில்லியம் கிரீன் இதற்கு தலைவராக இருந்தார்.

  • தி ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் பதிப்பு. கி.பி 1952 ( The Rivised standard version)
    திருத்தப்பட்ட ரிவைஸ்ட் பதிப்பு தான் "தி ரிவைஸ்ட் ஸ்டாண்டர்ட் பதிப்பு". தேசிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனை சங்கம் 32  அறிஞர்கள் அடங்கிய குழுவிற்கு அதிகாரம் வழங்கி இதை செய்தது. இப்படி 1937 ல் தொடங்கி 1952 ல் முடிக்கப்பட்டது. நேர்முறை பேச்சுக்கள் மேற்கோளிட்டு எழுதப்பட்டிருக்கிறது. இன்று இந்த குழு தொடர்ந்து அகில உலக ஐக்கிய குழுவாக செயல்பட்டு வருகிறது. 1973 ல் முதல் பதிப்பு வெளிவந்தது.

  • Amplified பதிப்பு கி.பி 1958 (Amplified Version)
    கலிபோனியா வை சேர்ந்த 12 ஆசிரியர்கள் பொருத்தமான வேறுசில விளக்கங்களை கொடுத்து விரிவான பதிப்பாக வெளியிட்டனர்.

  • பெர்க்லி பதிப்பு  கி.பி 1959 (Berkely Version)
    டாக்டர் பெர்க்லி தனது குழுவான 20  அறிஞர்களுடன் இந்த பதிப்பை கடினமான பகுதிகளுக்கு அடிக்குரிப்புகளோடு விளக்கம் எழுதி வெளியிட்டார்.

  • எருசலேம் வேதம்  கி.பி 1966 (the Jerusalem Bible)
    எருசலேமிலுள்ள ரோமன் கத்தோலிக்க வேதாகம பள்ளியின் பாடங்களை சார்ந்து வெளியிடபட்ட பதிப்பாகும். இது அதிக தெளிவாகவும் சரியாகவும், அறிஞர்களை கொண்டு வெளியிடபட்டதாக காணப்படுகிறது.

  • புதிய ஆங்கில வேதம். கி.பி 1970 ( The New English Bible)
    oxford மற்றும் cambridge அச்சகங்களின் 22  வருட முயற்சியினால் வந்த பதிப்பாகும்

  • புதிய அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள்  கி.பி 1971 (The New American standard bible)
    லோக்மன் என்பவரின் ஆதரவோடு சுவிசேஷ அறிஞர்கள் 10  வருட பனியின் முடிவே இந்த பதிப்பு.

  • லிவிங் பைபிள்  கி.பி 1971 ( The Living Bible)
    அமெரிக்காவை சேர்ந்த கென்னத் டெய்லர் சாதாரண மனிதனும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

  • குட் நியூஸ் பைபிள்  கி.பி 1976 ( The good News Bible)
    இன்றைய நடைமுறை ஆங்கில பதிப்பு. இறையியல் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு சாதாரண பதங்கள் பயன்படுத்தபட்டிருக்கிறது.

  • நியூ இன்டர்நேஷனல் பதிப்பு  கி.பி 1978 (The New International Version)
    அகில உலக சுவிசேஷ அறிஞர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு மிக சிறந்ததாகவும் ஏனைய பதிப்பை காட்டிலும் மேன்மை உள்ளதாகவும் காணப்படுகின்றது.

  • நியூ கிங் ஜேம்ஸ் பதிப்பு  கி.பி 1982
    அகில உலக வேதாகம கல்வி சங்கமும் தாமஸ் நெல்சன் வெளியீட்டாரும் இணைந்து 119  வேத சாஸ்திர வல்லுனர்களை வைத்து இந்த மொழிபெயர்ப்பை செய்தனர். இதன் முக்கிய நோக்கம் கிங் ஜேம்ஸ் பதிப்பின் இலக்கிய அழகை காத்து இன்றைய பழக்கத்தில் உள்ள பதங்களை பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட ஒரு முன்னேற்ற பதிப்பாகும்.

    இவ்விதமாக இன்று பழக்கத்தில் உள்ள பல வித வேதாகம பதிப்புகள் உருவாகின

தமிழ் வேதாகம சரித்திரம்

தமிழ் வேதாகம சரித்திரம்
இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு.
தமிழ் மொழியில் வேதாகமம் மொழி பெயர்க்கப்படுவதற்கு முக்கிய கார ணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின் அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும், அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு முன் வந்தார்கள்.  சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார். இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில் பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார் தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள் மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார்.  வீரமும், விடாமுயற்ச்சியும் நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது. சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை
இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது.  அவர்கள் இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப் மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள். அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல் மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள்.
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது.
ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க் கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது. எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன் பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல் அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின் தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால் அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும் இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன் னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள். 1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை 10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம் உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C. ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க் தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும் குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால் போக அனுமதியளிக்கப்பட்டது.
அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோ டிருந்தார். அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில் தங்குவத ற்கு இடமளித்தார்.
தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள் சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது. அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (commander)அவர்களை இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க் நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத் துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும், மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும், மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால் அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார்.
ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப் பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும். தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே. டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர் அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி தெரியாது. அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும் தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க் தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை; தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார்.
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர் தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப் பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு 87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என அழைப்பது சாலப் பொருத்தமாகும்.
தன்னுடைய சொந்தத் திறமையினாலும், விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும் வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும் அச்சிடப்பட்டது.
தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும் ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36 வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக பயணத்தை முடித்தார்.
அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன் பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம், கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார். தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719 பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார். ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன் தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப் பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை விட்டார்"
ஸ்கள்ட்ஸ்:
சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின் ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பிப்ரேஷியஸ்:
சீகன் பால்க்கும், ஸ்கள்ட்ஸீம் மொழி பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப் பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள பல குறைகள் நிமித்தம் அதை மறு ஆய்வு செய்தல் அவசி யமாயிற்று. சீகன் பால்க்கிற்கு அடுத்து, தமிழ் வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய பிலிப் பிப்ரோஷியஸ்,
இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து இறங்கினார். அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும், கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. பிரெஞ்சுப் படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப் பார்த்ததின் விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும் இலக்காயிற்று, இதன் நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள புலிக்கோட்டை என்ற இடத்தில் அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து ஹைதர் அலியும், அவரது கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து வந்தபோது பிர்ரேஷியஸ் ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு கொந்தளிப்பான சூழ்நிலை யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ் வேதாகமத்திற்கு முன்னோடியாக தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும் வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழி பெயர்த்து, 1773 ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்க், ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின்  கண்டனத்திற்குள்ளாயிற்று. அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு, வேதாகம மொழி பெயர்ப்புத் துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக் கருதப்பட்டது. அதற்கு காரணம் " அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல பாஷையிலுள்ள பகுதியை வாசித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு, இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக விளங்கியது என்பதும் இவருடைய மொழி பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர் தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn ) என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து அதிக ஆர்வமி ருந்தது. இதன் விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக அவசியமாக இருந்தது, இதுவே ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர். புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழ்தேசமக்களும் "நாங்கள் உண வையோ பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை: எங்களுக்கு தேவனுடைய வார்த்தையே தேவை" என்று அவரிடம் கூக்குரலிட்டனர்.
திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதா கமத்தை உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஒரு புதிய ஏற்பாட்டை உடையவராக இல்லாதிருந்தார்கள்.
ரீனியஸ்:
இந்த சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கம் சார்பாக ஊ.வு ரீனீயஸ் என்ற ஜெர்மன் தேச தேவ ஊழியாஇந்தியாவுக்கு வந்தார். இவர் வேதாகமச்சங்கத்தின் பொறுப்பிலுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியத்தை மேற்கொண்டார். 1840 ம் ஆண்டு தமிழ் வேதாகமத்தின் முழு முதல் பதிப்பு இந்திய வேதாகமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. இவ்வேதாகமம் பிப்ரேஷியஸ் என்பவர் மொழி பெயர்த்த பழைய ஏற்பாட்டையும், ரீனியஸ் என்பவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. இவ்வாறு இணைத்ததற்குக் காரணம் பிப்ரேஷியஸ் என்பவரும், ரீனியஸ் என்பவரும் தங்களுக்குரிய தனித் திற மையை தத்தம் மொழி பெயர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் என்ற விதத்தில் இருவரும் சரிநிகர் சமமாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட மொழிபெயர்ப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியானது அவரவர்களுடைய தனித்திறமை விளங்கும் மொழி பெயர்ப்பின் பாகங்கனை ஒன்றாக இணைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டது. பிப்ரேஷியஸின் பழைய ஏற்பாடு, மூல வேதாகமத்தோடு மிக அதிகமாக ஒத்திருந்தது. அதைப்போலவே ரீனியஸின் புதிய ஏற்பாடும் அமைந்தது.
(இலங்கை) யாழ்ப்பாண திருப்புதல்:
(Jaffna Version)
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் வட இலங்கைத் தமிழரிடையே ஊழிய ஞ் செய்துவரும் தேவ ஊழியர்கள் அப்போதிருந்த வேதாகமப் பதிப்புக்களிலிருந்த தவறுகளை நிவிர்த்திச் செய்வதற்காக வேறொரு தமிழ் வேதாகமத்தை அச்சிட முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு குழு தற்காலத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலம் - தமிழ் அகராதியை எழுதினவரான பீட்டர் பெர்ஸில் என்பவரைத் தலைவராகவும், நவீன கால உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படும் இந்துமத வித்துவான் ஆறுமுக நாவலர் என்பவரை உறுப்பினராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருப்புதல் வெளியிடப்பட்டது. இந்த யாழ்ப்பாண திருப்புதல் பல வல்லுநர்களால் வரவேற்கப்பட்ட போதி லும், இதனுடைய இலக்கிய நடை சாதாரண வேதாகம மொழிபெயர்ப்பு நடைக்கு மாறுப்பட்டு இருந்ததினால் சாதாரண மனிதனின் ஆர்வத்தைத் தூண்டத் தவறிவிட்டது.
ஐக்கிய திருப்புதல்: (Union Version)
யாழ்ப்பாண திருப்புதலின் தோல்விக்குப் பிறகு மற்றொரு திருப்புதல் வெளியிடுவது தேவையாயிருந்தது, யாழ்ப்பாண திருப்புதல் ஒரு தோல்வியாக இருந்தபோதிலும் அது தொடர்ந்து வந்த எல்லா வேதாகமப் மொழி பெயர்ப்பு ஊழியங்களுக்கும், குழு (Committee) அமைக்கும் வழக்கம் ஏற்பட அடிகோலியது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் இயங்கும் பல மிஷன்களின் சார்பாக, டாக்டர் எச். போவார் என்பவரை தலைமை மொழி பெயர்ப்பாளராகக் கொண்டு ஒரு மறு பரிசீலனைக் குழு (Revision Committee) ஏற்படுத்தப்பட்டது. இவ்வ+ழியக் குழுவில் குறிப்பிடத் தக்கவரான டாக்டர் கால்டுவெல் உட்பட பல வல்லுநர்கள் ஒருமித்து பங்கு கொண்டார்கள். வட இலங்கையில் வசித்த கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களைக் கலந்து ஆலோசிக்காததால் " போவார் குழு" அமைப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. இதன் காரணமாக உடனடியாக இருதரப்பிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிலே தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக பொது பதிப்பு (Common Version) எனப்பட்ட ஐக்கிய திருப்புதல் (Union Version)கொண்டுவரப்பட்டு, 1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையைச் சார்ந்தவர்கள் பிப்ரேஷியஸின் பதிப்பைத்தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியாவிலும், இலங்கையிலும் வசிக்கின்ற தமிழ் மக்களிடத்தில் இப்போதுள்ள எல்லா பிரபலமான திருப்புதல்களிலும் இந்த ஐக்கிய திருப்புதல் தான் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது.
லார்சன் திருப்புதல்: (Larsen Version)
ஐக்கிய திருப்புதலின் வெளியீட்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை தமிழ்மொழி அடைந்த இலக்கிய வளர்ச்சி காரணமாக 1923ஆம் ஆண்டு, பல்மொழி அறிஞரும், தமிழ் வல்லுநருமான டாக்டர் எல்.பி. லார்சன் என்பவரைத் தலைவராகவும், வித்வான் ஜி. எஸ். துரைசாமி என்பவரைத் துணை வராகவும் கொண்டு, மற்றொரு திருப்புதல் குழு அமைக்கப்பட்டது. லுத்தரன் மக்கள் முதல் தடவையாக இக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார்கள். பிப்ரேஷியஸ் திருப்புதல்- கடவுள் என்ற சொல்லுக்கு பரா பரன் என்ற பதத்தையும், ஜக்கிய திரு ப்புதல் - தேவன் என்ற பதத்தையும் உபயோகித்திருந்தது. இதனால் கடவுள் என்ற சொல்லுக்கு எந்த பதத்தை உபயோகப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. நீண்ட ஆலோ சனைக்கு பின்பு, இரு தரப்பினரும் கட வுள் என் பொது பதத்தை இறுதியாக ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு லார்சன் திருப்புதல் வேதாகமம் 1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Friday, August 23, 2013

இரட்சிப்பின் வேதாகம வசனங்கள்.

நீங்கள் மற்றவர்களோடு இரட்சிப்பை பகிர்ந்துகொள்ளும்போது பயன்படுத்தவேண்டிய வசனங்கள்.


மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?


லூக்கா 12:15 (Luke 12:15)
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

ரோமர் 3:10-12,23 (Romans 3:10-12,23) 
10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

சங்கீதம் 53:1 (Psalms 53:1)
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

மாற்கு 7:20-23 (Mark 7:20-23)
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

கலாத்தியர் 5:19-21 (Galatians 5:19-21)
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)
21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

சங்கீதம் 10:4 (Psalms 10:4)
4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

யாத்திராகமம் 20:3-5 (Exodus 20:3-5)
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழத் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20)
6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
9. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
11. இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.
12. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
20. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
8. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்

ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.
4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

நீதிமொழிகள் 28:13,9 (Proverbs 28:13,9)
13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
9. வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

சங்கீதம் 32:1,2 (Psalms 32:1,2)
1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
2.எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.

ரோமர் 6:23 (Romans 6:23)
23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.

யோவான் 17:3 (John 17:3)
3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15)
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

1 கொரிந்தியர் 3:16,17 (1 Corinthians 3:16, 17)
16. நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.

எபிரெயர் 9:27 (Hebrews 9:27)
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6)
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

யோவான் 3:16-18 (John 3:16-18)
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

ரோமர் 5:8 (Romans 5:8)
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)
30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்

மத்தேயு 11:28 (Matt 11:28)
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.

வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20)
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

யோவான் 10:9 (John 10:9)
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

யோவான் 14:6 (John 14:6)
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12)
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா

1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5)
5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

ஏசாயா 43:11 (Isaiah 43:11)
11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

ரோமர் 10:9,10 (Romans 10:9,10)
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31)
31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,

யோவான் 1:12 (John 1:12)
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

1 யோவான் 5:12,13 (1 John 5:12,13)
12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், அவருடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவனுடைய குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்

யோவான் 3:36 (John 3:36)
36. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்



நீதிமொழிகள் 27:1 (Proverbs 27:1)
1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

நீதிமொழிகள் 29:1 (Proverbs 29:1)
1. அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

நீதிமொழிகள் 1:23-33 (Proverbs 1:23-33)
23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

1 யோவான் 2:22 (1 John 2:22)
22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

1 யோவான் 4:3 (1 John 4:3)
3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

வெளி 1:7,8 (Rev 1:7,8)
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்;கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.